பொள்ளாச்சியை சேர்ந்தவர் டாக்டர் மகேந்திரன் அவர் மக்கள் நீதி மையத்தின் கட்சியின் துணைத் தலைவராக தேர்தல் நேரத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கமல்ஹாசன் உடன் நெருக்கமாக இருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் அவர் ராஜினாமா செய்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து தொடர்ந்து பலர் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் தி.மு.க-வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் விலகினார் என்பது தெரிந்தது. மகேந்திரன் விலகலுக்கு பின் கமலஹாசன் காரசாரமான ஒரு அறிக்கை விட்டார் என்பதும் அதற்கு பதிலளிக்கும் வகையில் பல தொலைக்காட்சிகளில் டாக்டர் மகேந்திரன் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

டாக்டர் மகேந்திரனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் விலகினார் என்பது இன்று கூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் என்பவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது
நம்பகத்தகுந்த வட்டாரத்தின் தகவலின்படி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் விரைவில் தி.மு.க-வில் இணையவுள்ளராம். மேலும் தி.மு.க-வில் இணையும் அவருக்கு ஒரு பதவி மற்றும் பொறுப்பு தரப்பட்ட உள்ளதாகவும் இரண்டுமே வெயிட் ஆனது என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Be First to Comment