கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலக் கூட்டம், சிங்காநல்லூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மழைநீர் வடிகால், குடிநீர் விநியோகம்,தெருவிளக்குகள்,குப்பைகளை அகற்றுதல்,பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.
இதைத்தொடர்ந்து பேசிய கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில், கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கணக்குகள் குழு தலைவர் தீபா தளபதி இளங்கோ, சிங்கை மு. சிவா, சாந்தாமணி பன்னீர்செல்வம், பாக்கியா தனபால், கீதா சேரலாதன், கோவைபாபு, நவீன்குமார், சரஸ்வதி பெரியசாமி, பொன்னுச்சாமி, கோவிந்தராஜ்,விஜயகுமார், சித்ரா கே. மணியன், பூபதி, மோகன், தர்மராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுமித்ரா, அம்சவேணி மணிகண்டன், ஆதிமகேஸ்வரி திராவிட மணி மற்றும் மாநகராட்சிப் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Be First to Comment