மசினகுடியில் காட்டு யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவத்தின் வீடியோ தற்போது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்தது. இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்தனர்.

யானை சிகிச்சைக்காக செல்லும் வழியிலேயே யானை தெப்பக்காடு கொண்டு செல்லும் வழியில் லாரியிலேயே உயிரிழந்தது. இந்த நிலையில், மசினக்குடி அருகே குடியிருப்பு பகுதி அருகே வந்த யானையின் மீது சில மர்மநபர்கள் எரியும் டயரை தூக்கி எரிந்துள்ளனர். தீயில் எரிந்து கொண்டே இருந்த டயர், கீழே விழாமல் யானையின் காதில் சிக்கியுள்ளது. இதனால், வலியை தாங்க முடியாமல் அலறிக் கொண்டே வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலத்தரப்பட்டவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
Be First to Comment