Press "Enter" to skip to content

மதுக்கரையில் கோவில் நிலம் மீட்பு

கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ 50 கோடி மதிப்பிலான 7 ஏக்கர் நிலம் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலின் இடங்களை மீட்டெடுத்து வருகின்றது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளில் இருந்த பல்வேறு இடங்களை மீட்ட இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டுள்ளனர்.

2

பழமையான இந்த திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலமான ரூ25 கோடி மதிப்பிலான 7.61 ஏக்கர் நிலத்தை அறங்காவல்துறை இணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையிலான இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் , காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் துணையுடன் நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட இடத்தை திருக்கோவில் அறங்காவலர் சரண்யாவிடம் ஒப்படைத்தனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks