மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, சோளக்கரை சுற்றுக்கு உட்பட்ட இரயில்வே இருப்பு பாதைகளை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் முனைவர்.சேகர் குமார் நீரஜ் , மதுக்கரை வனச்சரக அலுவலர் மற்றும் சரக பணியாளர்கள் உடன் பார்வையிட்டார்.

அப்போது புதிதாக ரயில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்ட களப்பணியாளர்களுடன் உரையாடி, தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். பின்னர் ரயில்வே துறையினர் மூலம் தண்டவாளங்களில் இருபக்கமும் இரயில் ஓட்டுனர்களின் பார்வைக்காக சுத்தம் செய்யப் பட்டுள்ள பகுதிகளையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி விளக்குகளையும், புதிதாக அமைக்கப்படவுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து ரயில்வே தண்டவாள பகுதிக்கு அருகில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடிய அவர், சோளக்கரை காப்பு காட்டிற்குள் செயல்படாமல் இருக்கும் குவாரி பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Be First to Comment