“வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்கதான்” என கூறி மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இருவரை பிடித்த போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் இரு மாத ஊரடங்கிற்கு பின்னர் இன்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலையில் மதுக்கடை திறப்பை கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து , பட்டாசு வெடித்து கடை திறப்பை மது பிரியர்கள் கொண்டாடினர். இதன் பின்னர் உச்சகட்ட போதையில் காந்திபுரத்தில் மது பிரியர்கள் பேருந்தில் ஏற முடியாமல் தரையில் உருண்டு, தவழ்ந்து சென்ற சம்பவங்களும் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அதிகமாக மது அருந்திய இருவர் ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திறகு அழைத்து வந்து அமர வைத்தனர். கருமத்தம்பட்டி காவல் நிலையத்திலும் ரகளையில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். இருவரையும் பிடித்த பொழுது போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் எச்சரித்த போதும் அடங்காமல், நாங்கள் என்ன திருடினோமா? என எதிர் கேள்வி கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் “பப்ளிசிட்டிக்காக போலீஸ் இப்படி பண்ணுது” என காவல் துறையினரை கலாய்க்கவும் செய்த அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளவும் செய்தனர்.
இதன் உச்சகட்டமாக குடிபோதையில் இருந்த இளைஞர் போலீசாரிடம், “வீரப்பனுக்கு ஆயுதங்களை கடத்தியதே நாங்க தான சார் என எச்சரிக்கை தகவலை சொல்லி” மிரட்டியும் பார்த்தார். இவை அனைத்தையும் செல்போனில் வீடியோ பதிவு செய்த காவல்துறையினர், ஆம்புலன்சை வரவழைத்து அதிக போதையில் அலப்பறை செய்த மதுப்பிரியர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் கிட்டாம்பாளையம் கிராமத்தை ராஜேந்திரன், என்பது விசாரணையில் தெரியவந்தது.கருமத்தம்பட்டி காவல் நிலையம் வாசலிலேயே காவல்துறையினருடன் மது பிரியர்கள் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகளை வீடியோ கீழே :
Be First to Comment