கோவை மாவட்டம் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தயானந்த். உடுமலைபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மத்திய ஆசிரியர்களுக்காக வழங்கும் 2018ம் ஆண்டிற்கான ஐசிடி(Information and Communication Technology) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் முறையில் பாடங்களை நடத்தி வருவதற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் பாடங்களை அனிமேஷன் செய்து அதனை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இணைய தளத்தில் பதிவேற்றி அதனை QR code மூலம் காணும் வசதி புத்தகத்தில் ஏற்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து துவக்க பள்ளி ஆங்கில பாட புத்தகத்தை வடிவமைக்கும் குழுவில் தயானந்த் பணியாற்றி வருகிறார். அதில் இவர் மட்டும் 170க்கும் மேற்பட்ட அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கியதற்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தயானந்த் கூறுகையில், அன்மேஷன் முறை பாடமானது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார். தற்போது உள்ள சூழலில் இம்முறை கல்வியானது மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும். இதனை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இது ஒளிப்பரப்பும் போது இணைய வசதி இல்லாத இடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு பேருதவியாய் இருக்கும். அதே போன்று மாணவர்களின் மொழி திறனை மேம்படுத்த இணைய வழியில் வெளிநாடுகளில் மாணவர்களுடன் கலந்துரையாட செய்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் பிற மொழிகளை எளிதில் கற்று கொள்வர் என்று தெரிவித்தார்.
Be First to Comment