கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். நோய்தொற்று அதிகரித்து வரும் சூழலில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பலியானவர்களின் உடல்களை வைக்க தனியாக ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பலரது சடலங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தரையில் கிடத்தப்பட்டுள்ள காட்சிகள் காண்போர் மனதை ரணமாக்குகிறது.
இடம் :- அரசு மருத்துவமனை
கோவை
Be First to Comment