Press "Enter" to skip to content

மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

கோவை மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள நோயாளிகள் ஆதரவற்றோர் உள்ளிட்ட பொது மக்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

டிரஸ்ட்டின் நிறுவனத் தலைவர் கோவை சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில், ஆலோசகர் ஜெம் சாதிக் துணை ஒருங்கிணைப்பாளர்கள் தாஹீர், உசேன் மற்றும் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks