மனைவியை துன்புறுத்தி, கொடுமைப்படுத்திய ரவுடியை தி.மு.க தொண்டாமுத்தூரில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி விமர்சித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற தொகுதிக்குட்பட ராம செட்டிபாளையம் பகுதியிலுள்ள ஸ்ரீ சதாசிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். ராம செட்டிபாளையம் சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் யாரும் செய்யாத அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளதாகவும், சாலைகள், பாலங்கள் ஸ்மார்ட் சிட்டி என பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் பேசினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்த ஸ்டாலினின் கனவை முறியடித்து விட்டதால், அவருக்கு என் மீதும் அமைச்சர் தங்கமணி மீதும் கோபம் அதிகம் என தெரிவித்தார். மனைவியை கொடுமைப்படுத்திய ரவுடி ஒருவரை தி.மு.க தொகுதியில் வேட்பாளராக களமிறக்கி உள்ளது என விமர்சித்த அமைச்சர், தான் கட்சி, சாதி, மத பாகுபாடு பார்க்காமல் சேவையாற்றி வருவதாக தெரிவித்தார்.
Be First to Comment