பஞ்சாமிர்தம் என்றால் பழநிதான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்து நமது கோவை மருதமலைதான். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. சில நாட்களுக்கு முன்புதான் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு மூன்று மாதங்களுக்கான டெண்டர் விடும் நிகழ்வு நடந்தது.
பஞ்சாமிர்தத் பற்றி தெரிந்து கொள்வோம். பஞ்சாமிர்தம் அல்லது ஐந்தமுது என்பது இந்து சமயப் வழிபாடு மற்றும் பூசனைகளில் பயன்படுத்தப்படும் ஐந்துணவுக் கலவை ஆகும். தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவையே அந்த ஐந்துணவுகள் ஆகும்.
தமிழ்நாட்டில் தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவற்றை சம பங்காய்க் கலந்து இது தயாரிக்கப்படுகிறது. பஞ்சாமிர்தம் பூசைகளின் போது பிரசாதமாகவும், தெய்வத் திருமேனிகளை அபிசேக வழிபாடு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் தேன்,நெய், கரும்பு சர்க்கரை, ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மலைவாழைப்பழத்தால் தயாரிக் கப்படும் பஞ்சாமிர்தம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு, அதிக சுவை கொண்டதாகவும் இருக்கும்.
பஞ்சாமிர்தம் என்ற நைவேத்தியத்தின் தாத்பரியம் என்ன?
பஞ்சாமிர்தம். ஐந்து அமிர்தம்.அதில் இருக்கும் ஐந்து பொருட்களும் அமுதத்துக்கு இணை. நமக்கு மரணம் வராமல் தடுப்பது அமுதம். அந்த ஐந்து பொருட்களும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை.
பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தச் சொல்லிருக்கிறார்கள்.அது சாப்பிட ச் சுவையாக இருப்பதால் அதை நைவேத்தியத்துக்கு நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.அதில் இருக்கும் ஐந்து பொருட்கள் என்ன?
பழம், வெல்லம்,நெய்,பால், தேன் ஆகியவற்றைச் சேர்க்கிறோம். இப்போது நீங்கள் பார்க்கும் பஞ்சாமிர்தத்தில் உள்ள பொருட்களெல்லாம் பிற்பாடு நாமாக அவரவர்கள் வசதிக்குச் சேர்த்துக்கொண்டவை. மேலே சொன்ன ஐந்து பொருட்கள்தான் பஞ்சாமிர்தத்தில் சேர்க்க வேண்டியவை.

பால், முழு உணவு. பாலை மட்டும் சாப்பிட்டே உயிர் வாழலாம்.
சர்க்கரை, கரும்பில் இருந்து நம் உடலுக்கு வலிமை கொடுக்கிறது. இது சகல உயிர்களும் விரும்பக்கூடிய ஒன்று.
பழம், உடலுக்கு இதம் தருவது. தேன்,கபத்தை இல்லாமல் செய்துவிடும்.
நெய்,ஆயுளைக் காப்பாற்றும்.
இவை அனைத்துமே இனிப்பு. ஒவ்வொரு விதமான இனிப்பு. இப்படி பூவிலிருந்தும் தண்டில் இருந்தும் மருந்திலிருந்தும் இயற்கையாகக் கிடைக்கும்.
பரிசுத்தமான இனிப்புகளின் தொகுப்பே பஞ்சாமிர்தம்.

எனக்கு வாழ்க்கை பூராவும் இனிப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர், இந்த ஐந்து அமிர்தத்தையும் சேர்த்து கடவுளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டு என்பது அறிவுரை.
Be First to Comment