உலகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் 324 சி பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பாக 250 மருத்துவர்களை பாராட்டி கவுரபடுத்தும் விழா கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. 324 C லயன்ஸ் மாவட்ட சேவைகளின் ஒருங்கிணைப்பாளர் லயன் இராமசுப்ரமணியன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றுள்ள லயன் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவர்களை வாழ்த்தி அவர்களுக்கு புத்தகங்களையும் , 270 மூலிகை செடிகளையும் கொடுத்து சிறப்பு செய்தார்.

சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர காவல்துறை கிழக்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் அருண் அரிமா கருணாநிதி, 324கூட்டு மாவட்டத்தலைவர் , முன்னாள் ஆளுநர் டாக்டர். பழனிசாமி, காளிச்சாமி , முதல் நிலை ஆளுநர் ராம்குமார்,இரண்டாம் நிலை ஆளுநர் ஜெயசேகரன்,மாவட்ட செயலாளர்கள் சூரி.நந்தகோபால், உதயகுமார் , பொருளார் கோபலகிருஷ்ணன், பிரகாஷ் மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய விருந்தினர்களாக இ.எஸ்.ஐ.மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன்,கண்காணிப்பாளர் ரவிக்குமார்,துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் கொரோனா கால பேரிடர் சமயத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர்களை காப்பதற்கு பணியாற்றிய மருத்துவர்கள் தான் தி ரியல் ஹீரோஸ் என புகழாரம் சூட்டினர்.மேலும்,மனித உயிர்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் என்றுமே போற்றுதலுக்குரியவர்கள் என தெரிவித்தனர்.
Be First to Comment