கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தழிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் திருப்பூர் நாமக்கல் ,கிருஷ்ணகிரி , நீலகிரி உள்ளிட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்பனர் பணியிடங்களை, காலமுறைப்பணியிடங்களாக மாற்றி தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும் , அனைத்து ஆய்வக நுட்பணர்களை பழைய ஓய்வூதியத்தில் இணைத்திட வேண்டும். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமணையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆய்வக நுட்பனர்களையும் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இணைக்க வேண்டும், ஆய்வக நுட்பனர் கவுன்சிலை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Be First to Comment