நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பகல் நேரங்களிலேயே யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
இன்று காலை 9 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை மேல்தட்டப்பள்ளம் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை ஒன்று திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது.
அதனை பார்த்து அதுவரை இருக்கையில் அமர்ந்திருந்த பேருந்து ஓட்டுனர் ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
அதன்பின் யானை பேருந்துக்கு பின்புறமாக சென்றுவிட்டது. யானையை பார்த்து பயப்படாமல் பேருந்து பயணிகளை பாதுகாத்த ஓட்டுனருக்கு பேருந்து பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பதட்டம் நிலவியது. இதனை அந்த பேருந்தில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
Be First to Comment