மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 81 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாட்டு வண்டியில் கட்சியின் சக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment