தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி மாணவிகளுக்கு உதவித்தொகை என்ற திட்டம் அனைவராலும் வரவேற்கப்பட வேண்டும். என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக, திருமண உதவித்திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை எனவும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
சமூக நலத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவித் திட்டம் தான் தற்போது பெண்களின் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன், ”இதை அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும். தாலிக்கு தங்கம் திட்டத்தால் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் உதவி தொகையை விட அதிகமான தொகையை ஒவ்வொரு பெண்ணும் கல்லூரி முடிக்கும் போதே பெற்றுவிடுவார்.
இந்தப்பணம் முழுவதும் ஒவ்வொரு மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும். பெண் குழுந்தைகளை செலவு செய்து படிக்கவைக்க வேண்டுமா ? என நினைக்கும் அறியாத பெற்றோர்கள் இனி அந்த பெண்களின் படிப்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.இதன் மூலம் மாணவிகளின் இடைநிற்றல் குறையும் !
ஒவ்வொரு பெண்ணும் கல்யாண வயதில் பட்டப்படிப்புடனும், தன்னம்பிக்கையுடனும், தகுதியுடனும் நிற்பதை விட அடுத்த நாளே விலைபோகும் தங்கத்துடன் நிற்பது ஒன்றும் பெரிதல்ல. ஏற்கனவே நடந்த திருமணங்களை கூட புதிதாக நடப்பதைப்போல நடத்தி இதுவரை பல ஊழல் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த திட்டம் மாற்றப்பட்டது உண்மையிலேயே அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
மாணவிகளுக்கு செய்யும் முதலீடு நாட்டுக்கு செய்யும் முதலீடு என்பதை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும்,பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் என்றே கருதவேண்டியுள்ளதாக” தெரிவித்தார்.

மாணவிகளுக்கு உதவித்தொகை திட்டம் வரவேற்கத்தக்கது – வே.ஈஸ்வரன் | tamilnews
More from UncategorizedMore posts in Uncategorized »
More from தமிழகம்More posts in தமிழகம் »
- கல் குவாரி: குத்தகைதாரருக்கு ரூ.10.4 கோடி லட்சம் அபராதம்
- களைகட்டிய அறிவாலயம்… குவிந்த விண்ணப்பங்கள்!
- தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…
- தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீச்சு!
- சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 % ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்…சு வெங்கடேசன் எம்.பி கேள்வி?
Be First to Comment