கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கை, நேற்று இரவு ஹேக்கர்கள் முடக்கிய நிலையில், தற்போது மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கு மீட்பு.நேற்று இரவு ஹேக்கர்கள் கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கில் சென்று அதை முடக்கினர். சைபர் தொழில்நுட்ப பிரிவினர் காவல் துறையின் ட்விட்டர் கணக்கை மீட்டு, கிரிப்டோ கரன்சி குறித்த தகவல் பதிவுகளை நீக்கி உள்ளார்கள்.கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கு “ஹேக்” செய்யப்பட்டுள்ள நிலையில், கணக்கை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர். கோவை மாநகர காவல் துறையின் சார்பில் சமூகவலைதளப் பக்கங்கள் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பதிவிடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு கோவை மாநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்தனர் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்தப் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களும் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை ட்விட்டர் கணக்கு “ஹேக்” செய்யப்பட்டதை அறிந்த கோவை மாநகர காவல்துறையினர் உடனடியாக அதை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்க சைபர் கிரைம் பிரிவு போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், தற்போது கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டதாகவும்.மேலும் சைபர் தொழில்நுட்ப பிரிவினர் காவல் துறையின் ட்விட்டர் கணக்கை மீட்டு கிரிப்டோ கரன்சி குறித்த தகவல் பதிவுகளை நீக்கி உள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment