அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டும், கேஎம்சிஹெச் மருத்துவமனையில் செயல்படும் மார்பக புற்று நோய் சிகிச்சை மையத்தின் 10-வது ஆண்டுவிழாவை முன்னிட்டும், பெண்களிடையே மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேஎம்சிஹெச் மருத்துவமனை கோவை ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து ‘மை பிரெஸ்ட் ஆப்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி வாயிலாக,மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள், அதற்கான சுயபரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை மற்றும் , சிகிச்சை முறைகள் என அனைத்து விவரங்களையும் முழுமையாகவும் எளிதாகவும் அறிந்துகொள்ளலாம்.. முன்னதாக கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டல் அரங்கில் செயலி அறிமுக விழா கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என். பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் அவர், ‘பயத்திலிருந்து விடுதலை; என்ற மார்பக ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டத்தை துவக்கிவைத்தார். கேஎம்சிஹெச் மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி ‘மை பிரெஸ்ட் ஆப்’ செயலியை அறிமுக செய்து வைத்தார். விழாவில் ரோட்டரியன் ராஜ்மோகன் நாயர், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். கேஎம்சிஹெச் மருத்துவமனை மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரூபா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்பொழுது பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். உபயோகிக்க எளிதான இந்த செயலியானது பெண்களின் தேவையற்றை பயத்தைப் போக்கும் என்றார்..

இந்த செயலி மூலம் பெண்கள் மருத்துவர் ஆலோசனை பெறலாம், தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம் மற்றும் நேரில் மருத்துவ ஆலோசனை பெற்றிட முன்பதிவு செய்துகொள்ளலாம்.மை பிரெஸ்ட் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும் என்பது குறிப்பிடதக்கது…
Be First to Comment