தீயாய் பரவிடும் பெருந்தொற்றிலிருந்தும், உயிர் பலியிலிருந்தும் மக்களை காத்திட பல்வேறு கோரிக்கைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் குறிச்சி பிரபாகரன் மனு அளித்தார்.
18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையப்பட்டியலில் கிணத்துக்கடவு தொகுதிக்கு தடுப்பூசி மையம் அறிவிக்கப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மையமானது கிணத்துக்கடவு மக்களுக்கு 25கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு கிணத்துக்கடவு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தொகுதியின் மையப்பகுதியான குறிச்சி, மதுக்கரை அல்லது அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார மருத்துவமணையில் கொரோனா தடுப்பூசி மையம் அமைத்து தரக்கோரியும், மதுக்கரை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் (central oxygen system) ஆக்சிசன் வசதி மற்றும் இதர கூடுதல் படுக்கை வசதிகள் செய்து தரக்கோரியும், அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவமனையில் தேவையான கூடுதல் வசதிகள் செய்து தரக்கோரியும் தி.மு.க கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நாகராஜனிடமும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் கோரிக்கை மனுவினை அளித்தார்.
Be First to Comment