கோவையில் உணவுக் கிடங்குகளிலிருந்து குடியிருப்புக்குள் வரும் செல் பூச்சிகளால் பொதுமக்கள் அவதி..! பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – தி.மு.க கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
தி.மு.க கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் கோவை மாவட்ட ஆட்சியர் சமிரனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயப்பிரகாஷ் அவர்களின் வீடு தீப்பிடித்து எரிந்ததால் அவருக்கு மாற்று வீடு வழங்கவும்,மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பீளமேடு இந்திய உணவுக்கிடங்கு(FCI ROAD)சாலையைச் சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்துத் தரவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் நீண்டகாலமாக பீளமேடு இந்திய உணவுக்கிடங்கு (FCI ), ஒண்டிப்புதூர் இந்திய உணவுக்கிடங்கு (FCI) ஆகியவற்றில் உள்ள தானியங்களில் இருந்து செல்பூச்சிகள் உற்பத்தியாகி,
அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால்,
உடனடியாக செல்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும்,வெள்ளலூர் – சிங்காநல்லூர் இணைப்புப் பாலம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அங்கு புதிய பாலம் அமைத்துத் தருமாறும்
மனுவாக அளித்து விரைவில் அவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.
Be First to Comment