மின்சார கட்டண உயர்வால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிக்கப்படுவதோடு,இந்த கட்டண உயர்வு தொழில்களும் நலிவடைய செய்வதாக கோவை மாவட்ட சிறு குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை கொடிசியா அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறு,குறு தொழில் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தொழில் சங்கத்தின் கொடிசியா தலைவர் திருஞானம்
“தற்போது மின் கட்டணத்தை 17மடங்கு உயர்த்தியுள்ளதால் சிறு,குறு தொழில்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் 17சதவீதம் மின்சார கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழக அரசு புதிய மின் திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறை மின்சார கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல பீக் ஹவரான 8மணி நேரத்திற்கு தொழிற்சாலைகளுக்கு 25சதவீதம் கூடுதல் மின் கட்டணம் போடபட்டுள்ளதால் சிறு,குறு தொழிற்சாலைகள் கூடுதல் நிதிச்சுமை அடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும்,தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால், ஏற்கனவே போக்குவரத்து செலவு உள்ளதால், தற்போது மின் கட்டணமும் அதிகமானதால் தங்கள் உற்பத்தி செய்ய கூடிய பொருளின் செலவு மிகவும் அதிகரிப்பதாக தெரிவித்தனர். தமிழகத்தில் இந்த பொருட்களின் விலை உயர்வால் ,வெளி மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் படையெடுப்படுதாகவும், இங்கு உள்ள உற்பத்தியாளர்கள் தங்களது ஆர்டர்களை இழக்க நேரிடுவதாக வேதனை தெரிவித்தனர்.
Be First to Comment