உலகம் முழுவதும் மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது.
அந்த வகையில் கோவை செட்டிபாளையம் பகுதியில்
இடைவெளி இல்லா அடா்காடு என்ற தத்துவப்படி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் பிக்கி ஃப்ளோ மற்றும் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை, சுகம் குழுமம் ஆகியோர் இணைந்து 3500 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டுக்குள் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்,மாசுபடுதலை குறைத்தல், சுற்றுச்சூழலை நிலைத்திருக்கச் செய்தல் மற்றும் சுத்தமான, பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குவதின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.
இதில் பிக்கி ஃப்ளோ ரித்திஷா நிவேதா, சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை தலைவர் சசிகலா, தி.மு.க
மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், செட்டிபாளையம் பேரூராட்சி செயலர் ஜெகதீஷ் ,கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன், மதுக்கரை ராஜசேகர், தி.மு.க பகுதி பொறுப்பாளர் ரங்கசாமி, ஜெயபிரகாஷ் மற்றும் ஃப்ளோ உறுப்பினர்கள் மஞ்சு இளங்கோ, காமினி சுரேந்திரன்,அபர்ணா சுரேன், உள்ளிட்ட தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மரங்களை நடவு செய்தனர்.
Be First to Comment