கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் தலா ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையம் சாலை, பூமார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பூமார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், பேருந்து பயணிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் முக க்கவசம் அணியும் படி வலியுறுத்தினார். அவர்களுக்கு தலா ரூ.200/- வீதம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி மற்றும் அரசின் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் கேட்டுக்கொண்டார்.
Be First to Comment