தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று இரவு சென்னையிலிருந்து கோவை வருகை தர உள்ளார். கோவையில் சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்க உள்ளார். இங்கு தங்கும் முதல்வர் நாளை காலை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளார். மக்கினாம்பட்டியில் மதியம் தங்கும் அவ,ர் ஆட்சிப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் பங்கேற்க உள்ளார். கோவை மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

முதல்வர் வருகையை முன்னிட்டு, பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கும் இடம் மற்றும் ஆட்சிபட்டி கட்சி விழா பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை விழா நடக்கும் பகுதிகளில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்வர் வருகையால் விழா நடக்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்தல், நலத்திட்ட உதவிகள் பெற பொதுமக்கள் வந்து செல்ல வழிவகை செய்தல் போன்ற பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Be First to Comment