தமிழக முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக 100 என்ற அவசர எண்ணில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல்விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முதல்வரின் சென்னை இல்லத்துக்கும், சேலத்திலுள்ள இல்லத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் பேசிய நபர் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சோதனை நடத்தினர். முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
Be First to Comment