சமீபத்தில் நடந்த பிராமண சங்க கூட்டத்தில் ”நெல்லை” சடகோபன் பேசிய பேச்சுக்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமண சங்க கூட்டத்தில் சாதிய ரீதியில் பேசியதும், திராவிடர் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, வீரமணி மற்றும் வை.கோ ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டு மிக கீழ்த்தரமான முறையில் விமர்சித்துள்ளார். மேலும் தமிழக முதல்வரையும் விமர்சித்து பேசியுள்ளார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கு முன் சாட்டை துரைமுருகன் என்பவர் அவதூறாக பேசியதற்கு கைது செய்யப்பட்டது போல் ”நெல்லை” சடகோபனும் கைது செய்யப்படுவாரா? அல்லது நீதிமன்றத்தை விமர்சித்தவரையும், பெண்களை விமர்சித்தவரை இன்னும் கைது செய்யாத நிலையில் உள்ளது போன்றே ‘நெல்லை’ சடகோபன் விஷயமும் கண்டுகொள்ளாமல் விடப்படுமா என்று அரசியல் விமர்சகளிடையே பேச்சு எழுந்துள்ளது.
Video 👇👇👇👇👇
Be First to Comment