Press "Enter" to skip to content

முதல்வர் படம் அருகே பிரதமர் படத்தை மாட்டிய அண்ணாமலை! | tamilnews

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தார். இந்நிலையில் அவிநாசி சாலை கோல்டுவின்ஸ், துரைசாமி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். மத்திய அரசு வழங்கி வரும் இலவச அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்வதற்காக அண்ணாமலை அங்கு சென்றதாக கூறப்பட்டது. ரேஷன் கடைக்கு உள்ளே சென்ற அண்ணாமலை, முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டினார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர்கள் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். அப்போது அரசு ஊழியர்களை பா.ஜ.க-வினர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

More from தமிழகம்More posts in தமிழகம் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks