வெளிநாடுகளில் பணியாற்ற வாய்ப்புகள் வந்த போதும், சொந்த நாட்டுக்கு சேவையாற்றவே விரும்பியதாக அரிமா சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய முத்தூஸ் மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் முத்துசரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 D புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சுந்தராபுரம் பகுதியில் லிண்டாஸ் மகாலில் நடைபெற்றது.
ப்ளூம் 2021 எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், மாவட்ட ஆளுநர் குப்புசாமி தலைமை வகித்தார்.இதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டாடினர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது கோவை முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும்,எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும் ஆன டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
விருது வாங்கிய டாக்டர் முத்து சரவணக்குமார் பேசுகையில்,அரசு பள்ளியில் படித்து மருத்துவரான தமக்கு வெளிநாடுகளில் பணியாற்ற பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும், தாம் சொந்த நாட்டிலேயே பணியாற்றி சேவை புரிய விரும்பியதாக தெரிவித்தார்.மூட்டு மற்றும் இடுப்பு எலும்பு மாற்று சிகிச்சையில் வெளிநாடுகளை விட கூடுதல் தொழில் நுட்பங்களை கையாளும் திறமை நம் நாட்டு மருத்துவர்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment