அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார். அவருக்கு வயது 91. உடல்நலக் குறைவு காரணமாக கிண்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மொத்தமாக நான்கு முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொண்டாமுத்தூரில் இரண்டு முறையும் கோவை மேற்கு தொகுதியில் இரண்டு முறையும் வெற்றிவாகை சூடினார். எம்ஜிஆர் காலத்திலேயே பலம் வாய்ந்த நபராகக் கட்சியில் வலம் வந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பணியாற்றி காலத்தில் ஜி.பி. தியேட்டர் இருந்த இடத்தில் அமையவிருந்த பாரதியார் பல்கலைக்கழகத்தை தனது தொண்டாமுத்தூர் சட்ட மன்ற தொகுதியில் அமைந்திட காரணமாக இருந்தவர்.
மேலும் +2 கல்வி முறையை அறிமுகப்படுத்தி ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவ மாணவியர் மருத்துவம் விவசாயம் பொறியல் போன்ற மேற்படிப்பில் நுழைய காரணகர்த்தாவாக இருந்தவர் .
இவர் அதிமுகவிலிருந்து விலகி 2006ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்தும் 2014ஆம் ஆண்டு விலகினார். அன்றிலிருந்து இறக்கும் வரை அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு
More from தமிழகம்More posts in தமிழகம் »
- கல் குவாரி: குத்தகைதாரருக்கு ரூ.10.4 கோடி லட்சம் அபராதம்
- களைகட்டிய அறிவாலயம்… குவிந்த விண்ணப்பங்கள்!
- தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…
- தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீச்சு!
- சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 % ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்…சு வெங்கடேசன் எம்.பி கேள்வி?
Be First to Comment