தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகிற 28ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவிற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சியினரின் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தமிழக அரசுக்கு என புதிய தலைமைச் செயலகத்தை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்தார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அந்த கட்டிடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அது தலைமைச்செயலக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படுவதால் மாற்றப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கருணாநிதியின் நினைவாக ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலை அமைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
Be First to Comment