முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையொட்டி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணாநிதி அரசியல் வாழ்க்கை மற்றும் மக்கள் நல திட்ட புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட் ஆட்சியர் ஜி எஸ்.சமீரன் பார்வையிட்டார்.

இந்த புகைப்பட கண்காட்சியில் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வு முதல் அரசியல் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், முன்னாள் பிரதமர்கள், தமிழக முன்னாள் முதலமைச்சர்கள், பெரியார், அப்துல்கலாம் ஆகியோரை சந்தித்த தருணங்கள், மக்கள் நல திட்டங்கள் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கோவை மாவட்டத்தில் 2010ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கோவை மாவட்டத்திற்கு வழங்கிய நல திட்ட புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
Be First to Comment