Press "Enter" to skip to content

முறைகேடு இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்ய கோரி திரண்ட பொதுமக்கள்

முறைகேடு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள்.
கோவை மாவட்டம் காரமடை பகுதி கன்னார்பாளையம் ஊரில் கடந்த மாதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு பட்டாவிற்கு 25,000 ருபாய் தர வேண்டுமென அவர் கேட்டதாகவும் பணம் தராதவர்களின் பட்டாவை பணம் தருபவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு நபருக்கே 2,3 பட்டாக்கள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.


இதனை கண்டித்தும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வாங்கி விற்ற அந்த பெண் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்ப்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks