தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஈச்சனாரி வருகை தர உள்ளார். அதனை முன்னிட்டு வரவேற்பு, சட்டமன்றத் தேர்தல் மற்றும் விரைவு வாக்காளர் பட்டியல் வழங்கும் தொடர்பான கூட்டம் குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க சார்பில் போத்தனூரில் நடந்தது.


அதில் நாளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை 5 மணிக்கு ஈச்சனாரியில் இருக்கும் செல்வமகால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள திருமண விழாவிற்கு வருகை தருக உள்ளார். அதனை முன்னிட்டு தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் காதர், தெற்கு பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், ராஜமாணிக்கம், பிலிப், ஜின்னா, டிவிசன் செயலாளர்கள் சபரி பாலு, மகாலிங்கம், தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment