மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார், மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் சச்சின் இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் கடந்த 13 ஆண்டுகளாக ப்ளைவுட் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் கடையின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை கடையின் குடோனில் வீசி உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து பார்க்கும் போது பிராந்தி பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு குடோனில் வீசப்பட்டு சிதறி கிடந்தது. பிளாஸ்டிக் கவர்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டும், குடோனில் சிதறி கிடந்தது ப்ளைவுட்கள் பாதி எரிந்து கருகிய நிலையில் இருந்தது.

இதை அடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் வட்டாச்சியர் மாலதி,காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இரண்டு கடைகளிலும் எதற்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
Be First to Comment