கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பவானிசாகர் அணையின் நீர் தேக்கத்தின் பின் பகுதியாக உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் லிங்காபுரம் கிராமத்தை ஒட்டி உள்ள நீர்த்தேக்கங்களில் தற்போது தண்ணீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது.
இக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து இன்று காலை 11 காட்டுயானைகள் வந்து வாழைத் தோட்டங்கள் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளித்து விளையாடின.நீண்ட நேரமாக காட்டுயனைகள் நீரிலேயே விளையாடியது உடன் மீண்டும் வனத்துக்குள் திரும்பி செல்ல வழி தெரியாமல் தண்ணீரிலேயே நீந்திக் கொண்டிருந்தன.
பின்னர்,சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து அருகில் உள்ள வனப்பகுதியில் யானைகள் நுழைந்தன.
காட்டுயானைகள் வழிதெரியாமல் கிராமத்துக்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருந்துள்ளனர்.எனவே, காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியே வண்ணம் வராத வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Be First to Comment