பொள்ளாச்சி மின்கரை ரோட்டில் மையதடுப்பில் தடம்புரண்டு சென்ற அரசு பேருந்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஒன்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது சுமார் ஒரு கிலோமட்டர் தூரம் வரை இயக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வேட்டைக்காரன் புதூரை அடுத்த காளியாபுரம் நோக்கிச் சென்றது. மீன்கரை சாலையில் சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடம் மாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறியது, அதைப் பொருட்படுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்படியே நடுவில் இருக்கும் பூச்செடிகளை உடைத்துக்கொண்டு ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். இதனை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Be First to Comment