நாடு முழுவதும் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் 75 வது சுதந்திர தின சிறப்பு ஆண்டை கொண்டாடும் விதமாக கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த 75 கராத்தே மாணவ,மாணவிகளுக்கு தகுதி பட்டை வழங்கும் விழா பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது.தலைமை பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதில்,கட்டா மற்றும் குமித்தே ஆகிய கலைகளில் பத்து ஆண்டுகளாக தீவிர பயிற்சி பெற்று தகுதியடைந்த மாணவ,மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது.இதில் பயிற்சியாளர்கள் சிவமுருகன் அரவிந்த் சரண் தீபக் ராஜ்குமார் சின்னத்தம்பி ஹேமந்த் சிவலிங்கப் பெருமாள் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.கருப்பு பட்டையம் பெற்ற மாணவிகள் கூறுகையில்,தீவிர பயிற்சிக்கு பெற்றதால் இந்த பட்டயத்தை பெற முடிந்ததாகவும்,இதனால் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.விழாவில் பயிற்சி முடித்த தமிழ்ச்செல்வன் சாரதி, மகேஷ்வர், ஷாமில் ஹூசைன் டேன்யூ டிஜி தேவதர்ஷினி,ஷாஸா, உட்பட மாணவ மாணவிகள் பட்டயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

மை கராத்தே பள்ளியை சேர்ந்தவர்களுக்கு தகுதி பட்டயம்
by
Tags:
Leave a Reply