மோடி குறித்த இசையமைப்பாளர் இளையராசா ஒரு புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் “மோடியின் செயல்பாடுகளை பார்த்தால் அம்பெத்கர் பாராட்டியிருப்பார்” என்று ஒப்பிட்டு எழுதியது மிகுந்த சர்ச்சையானது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதற்கிடையில் இளையராசாவின் மகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு சட்டை அணிந்து “Dark Dravidian, Proud Tamilan” என்று எழுதியிருந்தார். இதனால் தனது வீட்டிலேயே அவரது கருத்துக்கு எதிர்ப்பு உள்ளது என சமூக வலைதளம் பேசப்பொருளானது.
இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ், ”மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று விமர்சித்து, அதற்கு மன்னிப்பும் கேட்டு பாக்யராஜ் அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.
இப்படி அடுக்காக பிரதமர் மோடியை ஒப்பிட்டு சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், தற்போது மசாலப்படம் புகழ் இயக்குநர் பேரரசு தனது ஆதரவை மோடிக்கு தெரிவிக்கும் வண்ணம் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ”மோடியை அம்பெத்கருடன் ஒப்பிட்டதை விட, முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டிருக்க வேண்டும்” என்று பேரரசு பேசியிருந்தார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்கள் இருவரும்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கடைபிடிப்பவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
”ஆரியமும் திராவிடமும் ஒன்னு, இதை அறியாதவன் வாயில மண்ணு” தமிழர்கள் இந்துக்கள் அல்லர். குலதெய்வ வழிபாட்டாளர்கள். தமிழ் தேசியத்தின் எதிரிகள் திராவிடர்களும் ஆரியர்களுமே. எதிரிகள் என்று சொல்வதை விட துரோகிகள் என்றே சொல்லலாம். என்று கூறிய முத்துராமலிங்கதேவரை மோடியுடன் ஒப்பிட சொல்வது எந்த வகையில் நியாயம் என தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் தேவர் அமைப்பினரும், தமிழ் சிந்தனையாளர்களும்.

மோடியை தேவருடன் ஒப்பிடுவதா? கிளம்பும் புதிய சர்ச்சை
More from தமிழகம்More posts in தமிழகம் »
- கல் குவாரி: குத்தகைதாரருக்கு ரூ.10.4 கோடி லட்சம் அபராதம்
- களைகட்டிய அறிவாலயம்… குவிந்த விண்ணப்பங்கள்!
- தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…
- தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீச்சு!
- சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 % ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்…சு வெங்கடேசன் எம்.பி கேள்வி?
Be First to Comment