கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டை முன்னிட்டு கல்லூரியின் வளாகத்தில் உள்ள மைதானத்தில் கல்லூரியின் பி.ஆர்.ஓ மற்றும் கல்லூரியில் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் மனிதநேயன் தலைமையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்து வந்த நிலையில்.
நிகழ்ச்சி காண பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வந்தவர்களை நிகழ்ச்சி திடலில் அனுமதித்துவிட்டு
அதற்கு பின்னர் வந்த மாணவ மாணவிகள் 3000க்கும் மேற்பட்டோரை நிகழ்ச்சி திடலில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு தகவல் எழுந்துள்ளது.

இதனால் கோபமுற்ற மாணவர்கள் உள்ளே நுழைய முயன்ற போது தள்ளுமுள்ளு எற்பட்டுள்ளது.
இதில் கேட் சுவற்று அருகே நின்றவர்களை தள்ளி கொண்டு உள்ளே செல்ல முயன்று உள்ளனர்.
அப்போது கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த
தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாரா மெடிக்கல் படிக்கும் மாணவி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி, கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் EEE இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆகியோர் கீழே விழ அவர்களை ஏறி மிதித்துக் கொண்டு மாணவ மாணவிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இதில் ஒரு மாணவிக்கு உடலில் முகம் மற்றும் நெஞ்சு,கைகள் ஆகிய பகுதிகளில் சிறு காயங்களும்.
மற்றொரு மாணவிக்கு வலது தோள்பட்டையிலும் இடது கண் அருகே ரத்த காயமும்.
மேலும் மற்றொரு மாணவிக்கு இடது தோள்பட்டையும் இடது மணிக்கட்டுக்கு கீழே ரத்தக்காயமும் ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக சரவணம்பட்டி விசுவாசபுரம் சத்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான நுழைவாயில் முன்பாக 1000 மாணவ மாணவிகள் ஒன்று கூடி உள்ளே செல்ல முற்பட்டபோது அங்கிருந்த கல்லூரியின் செக்யூரிட்டிகள் மற்றும் போலீசார் தடுத்தபோதும் அங்கிருந்த பிளக்ஸ் பேனர்களை தள்ளிவிட்டு உள்ளே சென்றதாக தகவல் கூறப்படுகின்றது.
மேலும் அந்த வழியாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வந்த கார் உள்ளே சென்றபோது காருக்கு பின்னால் அங்கிருந்த மாணவர்கள் ஒன்றாக உள்ளே தள்ளு முள்ளுடன் சென்றதை நுழைவாயிலின் பாதுகாப்பு பணியில் இருந்த சரவணம்பட்டி சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி பிலோமினா அவர்களை கீழே தள்ளி மிதித்தவாறு மாணவர்கள் உள்ளே சென்றதாக தகவல் கூறப்படுகின்றது.
இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக மேற்கண்ட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி தொடங்கிய போது மைதானத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சிலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடிய போது மேற்கண்ட கல்லூரிக்கு சேர்ந்த எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நல்லாம்பாளையத்தை சேர்ந்த மாணவிக்கும் மற்றும் எஸ்.என்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவரும், மாணவரும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர்.
விழுந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனை கொண்டு வந்து உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி நிகழ்ச்சிக்காக கல்லூரி நிர்வாக சார்பில் அனுமதி கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அனுமதி
மறுக்கப்படவில்லை இல்லை எனவும், மேலும் கல்லூரி நிர்வாகத்தினர் பத்தாயிரம் மாணவ மாணவிகளை அழைத்து நிகழ்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் கல்லூரி சரிவர செய்யப்படவில்லை என்பதால் தான் இத்தகைய பாதிப்புகள் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கோவையில் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் சினிமா நட்சத்திரங்களை கொண்டு இது போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் நடத்தும் போது போதிய பாதுகாப்பையும் இடவசதியையும் ஏற்படுத்திவிட்டு இட வசதிகளை உறுதி செய்த பின்பு அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் உரிய அனுமதிக்கு பிறகு தான் இத்தகைய நிகழ்வினை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கோரிக்கை குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment