சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கத்தினர் மற்றும் சோலி மசாலா ஆகியோர் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டது…. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் பயிலும் மாணவிகளை போற்றும் விதமாக, ரோட்டரி சங்கத்தினர் மற்றும் சோலி மசாலா சார்பாக அரசு பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜ்மோகன் நாயர் இவர்களுடன் சோலி மசாலா நிறுவனத்தின் தலைவர் சாந்தி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்..

இந்த மிதிவண்டி ஆனது பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், அவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து சோலி மசாலா நிறுவனத்தின் முதல்வர் கூறியபோது, ஏழை எளிய மக்களை படிக்க வைப்பதற்காக பல்வேறு உதவிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.இதற்கு முன் 1200 மிதிவண்டிகள் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் மாவட்ட இயக்குநர் மயில்சாமி மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment