கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்ஸ் சிட்டி சார்பில் 84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகளை தமிழக மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரான், எஸ்பி.பத்திரிநாராயணன், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Be First to Comment