கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோவை மாநகராட்சியில் நூறு 100 வார்டுகளிலும் 846 பகுதி சபை அமைக்கப்பட்டு, பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து பேசும்போது.. கோவையில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முதல்வரால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அனைவரும் 24 மணி நேரமும் பணி செய்ய தயாராக உள்ளனர். மின்வாரியமும் தயார் நிலையில் உள்ளது. பிஜேபியின் மாநில தலைவர் அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் தவிர்க்க வேண்டும். உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஸ்டி அவர், தொலைக்காட்சிகளில் கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது. நாங்கள் கோமாளி சொன்னது போல ஏதாவது கருத்து சொல்லி உள்ளோமா..? பத்திரிக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட அரசு தற்போதைய தமிழக அரசு! இவ்வாறு தெரிவித்தார்.
Be First to Comment