பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு நடைபெற்றது.
அதில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி பேசும் போது, ”`தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைப்பதுடன், பட்டியல் பிரிவிலிருந்தும் நீக்க வேண்டும். இதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதை முன்வைத்தே தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

மக்களின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். பெயர் மாற்றத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மத்திய அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மோடி சொல்வதால் ஏற்றுக் கொள்ள மாட்டேன்!
வரலாற்றில் அம்பேத்கர் செய்த தவறை, நான் செய்ய மாட்டேன்! பட்டியல் வெளியேற்றமே எமது உயிர் மூச்சு, இறுதி காலம் வரை சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.” என்றார்
Be First to Comment