பல ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாத வணிகர்களின் கடை முன்பாக குப்பைத்தொட்டிகளை வைத்து வரி வசூலிக்கும் நூதன நடவடிக்கையில் கோவை மாநகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில் வரி, வாடகை உள்ளிட்ட பல்வேறு இனங்களில் வரி செலுத்தப்படாத தொகை நிலுவை உள்ளது. இதை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் துண்டறிக்கை, ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வசூலித்து வருகின்றனர்.

சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் இல்லாததால் பல்வேறு இடங்களில் இன்று குப்பை தொட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜீவன் முருகராஜன் “சாரதாமில் ரோட்டில் இரண்டு பிரியாணி கடை, பெட்ரோல் பங்க், மதுக்கரை ரோட்டில் ஹார்டுவேர் கடை, டைல்ஸ் கடை, பேக்கரி வரி நிலுவையில் இருப்பதாலும், பல முறை நோட்டீஸ் கொடுத்தும் எந்தவித பதிலும் தராமல், வரி செலுத்தாததாலும் குப்பை தொட்டி வைக்கும் நடவடிக்கையினை மாநகராட்சி துணை ஆணையர் உத்தரவின் பேரில் எடுத்துள்ளோம். நிலுவையில் உள்ள வரி கட்டியதும் குப்பை தொட்டி எடுக்கப்படும்” என்றார்.

Be First to Comment