கோவையில் தனியார் குழுமத்தின் நிறுவனரின் சிலை திறப்பு விழாவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். கோவையில் பிரபலமான சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி.ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் குழுமத்தின் நிறுவனர் ராமசாமியின் திருஉருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரது வருகையை ஒட்டி விமான நிலையம் முதல் விழா அரங்கு வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் சிறப்புரை ஆற்றிய பசவராஜ் பொம்மை … இளமை காலத்தில் கோவையில் அவரது நினைவுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் G. ராமசாமி நாயுடு எனது காட்ஃபாதர் என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர் சுகுணா குழும தலைவரின் நூற்றாண்டு காலத்தில் மீண்டும் ஒரு முறை தமிழகம் வருவேன் என தெரிவித்தார்.

வருமான வரி நாட்டின் முன்னேற்றதுக்கு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்ட அவர், தொழில் முனைய தொடங்கிய போது எனது தந்தையின் பெயரை பயன்படுத்திக் கொள்ள கூடாது என அறிவுரை வழங்கியவர் ஜி.ராமசாமி என தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 21 ஆம் நூற்றாண்டு அறிவு சார் சகாப்தமாக உள்ளது என கூறிய பசவராஜ், கோவை மற்றும் திருப்பூர் பல நகரங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன என தெரிவித்தார்.
Be First to Comment