கோவை தி.மு.க தெற்கு மாவட்ட கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜொகராபானு அல்தாப் உசேன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கிணத்துகடவு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கிரி கதிர்வேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகமது யாசின், மற்றும் தி.மு.க மாவட்ட, ஒன்றிய,கிளை கழக,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுமார் 500க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Be First to Comment