கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில், ஜெட் ஏரோஸ்பேஸ் உடன் இணைந்து பிஎஸ்ஜி ட்ரோன் ஆராய்ச்சி ஆய்வகம் சார்பில் ட்ரோன் குறித்து வளர்ந்து வரும் சமீப தொழில் நுட்பங்கள் பற்றிய தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கிரிராஜ் ஒருங்கிணைத்த இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பாதுகாப்பு துறைக்கு பயன்படும்,பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள்,அதே போல் விவசாயம் துறைக்கு பயன்படும் மருந்து தெளிப்பான், உரமிடுதல்,மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பயன்படுத்தபடும் தகவல் தொடர்பு அமைப்புகள், தன்னியக்க அமைப்புகள், உயிரியல் மருத்துவம்,உள்ளிட்ட ட்ரோன் குறித்த போஸ்டர் விளக்க காட்சியும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சர்வதேச வெப்ப ஓட்ட ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசுதோஷ் தத் சர்மா,மற்றும் துணை தலைவர் நரேந்திர கவுர் கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் குறித்து விளக்கினர்.
Be First to Comment