வருகிற ஏப்ரல் மாதம் 6ந் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தினை கோவை உதவி ஆணையர் செட்ரிக் இமானுவேல் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சி கோவை மாநகரக் காவல் டி-3 காவல்நிலையத்தில் நடைபெற்றது. இதில் போத்தனூர் காவல் ஆய்வாளர் முரளிதரன்,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். மேலும் பொதுமக்களிடையே தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தினர். 100 சதவிகித வாக்களிப்பதே நமது இலக்கு என்பதனை உணர செய்தனர்.
Be First to Comment