Press "Enter" to skip to content

வாலாங்குளம் உபரி நீர் ஆறாக ஓடும் பகுதிகளை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டார்.

கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் வாலாங்குளம் உபரி நீர் ஆறாக ஓடும் பகுதிகளை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.

கோவையில் பெய்துவரும் கனமழையால் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாலாங்குளம் உபரி நீர் மற்றும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கழிவுநீர் வழிபாதைகளை பராமரிக்காததால் சாலையில் துற்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

சாலையில் ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் நோய்தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக அச்சபடுகிறார்கள்.

இந்த தகவலை அறிந்த கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாலாங்குளம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளை, ரோடுகளில் ஓடும் உப நீர்களை நேரில் பார்த்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக இதை சீர் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks