கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் கரும்பாலம் பகுதியில் சோலையார் எஸ்டேட்டை சேர்ந்த துரைராஜ் வயது (51) இவர், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்து வந்த காட்டு யானை அவரை தள்ளியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment